• Farmrise logo

    பேயர் ஃபார்ம்ரெய்ஸ் ஆப் நிறுவவும்

    நிபுணத்துவ விவசாய தீர்வுகளுக்கு!

    Install App
  • Hello Bayer
    வேளாண்மைக் கட்டமைப்பு நிதியம்
    வேளாண்மைக் கட்டமைப்பு நிதியம்
    இந்தத் திட்டம் முதலில் “ விவசாயத்துறை அமைச்சகம்” இணையதளத்தில் வெளியிடப்பட்டது மேலும் மேலும் தகவலுக்கு, “https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1637221” இணையதளத்தைப் பார்வையிடலாம். நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இந்தியா முழுவதும் வேளாண்மைத் துறையில் வேளாண்மைக் கட்டமைப்பு நிதியத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது, இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து, பயிர் மேலாண்மைக்கான சாத்தியமான திட்டங்களில் முதலீடு செய்ய நடுத்தர கால கடன் நிதி வசதி வழங்கப்படும். . இந்தத் திட்டத்தின் கீழ் தொடக்க வேண்மைக் கடன் சங்கங்கள், மார்க்கெட்டிங் கூட்டுறவு சங்கங்கள், வேளாண் உற்பத்தியாளர்கள் அமைப்புகள், சுய உதவிக் குழுக்கள், விவசாயிகள், கூட்டுப் பொறுப்பேற்பு குழுக்கள், பன்முகப் பயன்பாட்டுக் கூட்டுறவு சங்கங்கள், வேளாண் தொழில்முனைவோர், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தொகுப்புக் கட்டமைப்புச் சேவை வழங்குநர்கள் மற்றும் மத்திய / மாநில ஏஜென்சி அல்லது உள்ளாட்சி அமைப்பால் செயல்படுத்தப்படும் அரசு - தனியார் பங்கேற்புத் திட்டங்களுக்கு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடனாக ஒரு லட்சம் கோடி ரூபாய் வழங்கும். நடப்பாண்டில் ரூ.10 ஆயிரம் கோடியில் தொடங்கி நான்கு ஆண்டுகளில் கடன் வழங்கப்படும். அடுத்து வரும் ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும் ரூ.30 ஆயிரம் கோடி வழங்கப்படும். நன்மைகள் • இந்த நிதியளிப்புத் திட்டத்தின் கீழான அனைத்துக் கடன்களுக்கும் ஆண்டுக்கு 3 சதவீதம் வரை வட்டித் தள்ளுபடி வழங்கப்படும். இதற்கான அதிகபட்ச வரம்பு ரூ.2 கோடியாக இருக்கும். வட்டித் தள்ளுபடி அதிகபட்சம் 7 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். • மேலும், இந்த நிதித் திட்டத்தின் மூலம் தகுதியுள்ள கடனாளிகளுக்கு, குறு, சிறுதொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளை மூலம் ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு கடன் உத்தரவாதம் அளிக்கப்படும். இதற்கான கட்டணத்தை அரசு செலுத்தும். • விவசாய உற்பத்தி நிறுவனங்களைப், பொருத்த வரையில், வேளாண்மை, கூட்டுறவு, விவசாயிகள் நலன் துறையின் எப்.பி.ஓ. ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட திட்டங்களின் கீழ் கடன் உத்தரவாதங்களைப் பெறலாம். • இந்தக் கடன் வசதித் திட்டத்தின் மூலமான கடனை திருப்பிச் செலுத்துவதற்கான தவணை தொடங்கும் காலம் குறைந்தது 6 மாதங்களில் தொடங்கி, அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை அனுமதிக்கப்படும்.
    Some more Government Schemes
    சமீபத்திய அரசாங்க திட்டங்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகளுடன் புதுப்பித்த நிலையில் இருங்கள்
    Government Scheme Image
    Some more Government Schemes
    Some more Government Schemes
    பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டம்
    No date available
    Government Scheme Image
    Some more Government Schemes
    Some more Government Schemes
    பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டம்
    No date available

    எங்கள் கைபேசி செயலியை ப் பதிவிறக்கவும்

    பயணத்தின்போது : நிகழ்நேர சந்தைத் தரவை, எந்த நேரத்திலும், எங்கிருந்தும் எங்கள் செயலி மூலம் அணுகலாம். உங்கள் மொழியிலும் கிடைக்கும்.
    Google Play Image
    வீடுமண்டி விலைகள்