• Farmrise logo

    பேயர் ஃபார்ம்ரெய்ஸ் ஆப் நிறுவவும்

    நிபுணத்துவ விவசாய தீர்வுகளுக்கு!

    Install App
  • Hello Bayer
    Article Image
    விவசாயத்தில் உயிர் உரங்களின் பயன்பாடுகள்
    Oct 04, 2023
    3 Min Read
    மண் ஆரோக்கியத்தைப் பேணுவதில் அங்கக முறை வேளாண்மை முக்கியப் பங்கு வகிக்கிறது. மண் வளத்தை அதிகரிக்க பொருத்தமான உயிர் உரங்களைப் பயன்படுத்துவது போன்ற பல எளிய முறைகளை விவசாயிகள் பின்பற்றலாம். உயிர் உரங்கள் என்றால் என்ன: பாக்டீரியா, பூஞ்சாணம் மற்றும் பாசிகளிலிருந்து உயிர் உரங்கள் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட மண் மற்றும் தட்பவெப்ப நிலைகளை பொருத்த ஆராய்ச்சி மூலம் பயனுள்ள இனங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த இனங்கள் ஆய்வகத்தில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. இவ்வினங்களைத் தாங்கி எடுத்துச் செல்ல, இலை மக்கு மண் / தூள்கரி மண், நிலக்கரித் தூள், ஆகியவற்றுடன் கலந்து தயாரிக்கப்படுகிறது, இதனால் அவை போதுமான நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கும்.
    1.ரைசோபியம் இனங்கள்: வேர்க்கடலை, சோயாபீன் போன்ற பயறு வகைகளில் ரைசோபியம் வகைகளை பயன்படுத்தலாம். இது 10-35% வரை மகசூலை அதிகரிக்கும் மற்றும் ஏக்கருக்கு 50-80 கிலோ நைட்ரஜனை நிலை நிறுத்தும். 2.அசோடோபாக்டர்: வறண்ட நிலப் பயிர்கள் உட்பட பருப்பு அல்லாத பயிர்களில் அசோடோபாக்டரைப் பயன்படுத்தலாம். அசோடோபாக்டரைப் பயன்படுத்துவதால் 10-15% மகசூல் அதிகரிக்கிறது மற்றும் ஏக்கருக்கு 10-15 கிலோ நைட்ரஜன் கிடைக்கும். 3.அசோஸ்பைரில்லம்: மக்காச்சோளம், பார்லி, ஓட்ஸ், சோளம், தினை, கரும்பு, அரிசி போன்ற பயறு வகை அல்லாத பயிர்களுக்கு அசோஸ்பைரில்லத்தைப் பயன்படுத்தலாம், மேலும் இந்த உயிர் உரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் 10-20% மகசூலை அதிகரிக்கலாம். 4. பாஸ்பரஸ் கரைக்கும் நுண்ணுயிரிகள் (பாஸ்போபாக்டீரியா) பாஸ்போபாக்டீரியா அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது, இது 5-30% மகசூலை அதிகரிக்க வழிவகுக்கும்.
    உயிர் உரத்தின் ஒவ்வொரு பாக்கெட்டையும் (200 கிராம்) 200 மில்லி அரிசி கூழ் அல்லது வெல்லம் கரைசலில் கலக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு தேவையான விதைகளை அந்த கலவையுடன் கலந்து 30 நிமிடம் நிழலில் உலர்த்த வேண்டும். பின் விதைகளை 24 மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும். ஒரு பாக்கெட் உயிர் உரத்துடன் 10 கிலோ விதையை விதை நேர்த்தி செய்யலாம்.
    Attachment 1
    Attachment 2
    4 கிலோ பரிந்துரைக்கப்பட்ட உயிர் உரங்களுடன் 200 கிலோ பண்ணை எருவை கலக்க வேண்டும். அக்கலவையை ஒரு இரவு முழுவதும் வைக்கப்பட வேண்டும். விதைப்பதற்கு அல்லது நடவு செய்வதற்கு முன், இந்த கலவை மண்ணில் இட்டு உழ வேண்டும்.
    Attachment 1
    Attachment 2
    நடவு செய்யும் பயிர்களுக்கு, ஒரு ஹெக்டேர்க்கு ஐந்து பாக்கெட் (1.0 கிலோ) உயிர் உரங்களுடன் 40 லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தி இந்த நுட்பத்தைப் பயன்படுத்தலாம். 10 முதல் 30 நிமிடங்கள் வரை கரைசலில் வேர்களை நனைத்த பிறகு நடவு செய்ய வேண்டும். குறிப்பாக நெல் பயிருக்கு, அசோஸ்பைரில்லம் பயன்படுத்தப்படுகிறது.
    Attachment 1
    Attachment 2
    1 உயிர் உரத்தை குளிர்ந்த மற்றும் உலர்ந்த இடத்தில் (25-40 டிகிரி செல்சியஸ்) சேமித்து வைக்க வேண்டும். சூரிய ஒளியுடன் நேரடி தொடர்பைத் தவிர்க்கவும். 2 இது குறிப்பிட்ட பயிருக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் பயன்படுத்தப்பட வேண்டும். 3 உயிர் உரங்களின் பாக்கெட்டை வாங்கும் போது, அதற்கான பயிரின் பெயர், காலாவதி தேதி மற்றும் தயாரிப்பின் உருவாக்கம் ஆகியவற்றை சரிப்பார்க்கவும். 4 உயிர் உரங்கள் இரசாயன மற்றும் கரிம உரங்களுக்கு துணைப் பொருளாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.
    ஆரோக்கியமான தாவர வேர் மண்டலத்திலிருந்து மண்ணைச் சேகரித்து உலர்த்தி, அரைத்து, ரைசோபியம் மாதிரியாகத் தயாரிக்கவும். கிருமி நீக்கம் செய்யப்பட்ட பெட்ரி பிளேட்டில் கிருமி நீக்கம் செய்யப்பட்ட மீடியாவை (மானிடோல் அகர் மீடியா) வைத்து குளிர்விக்கவும். மாதிரியின் சில துளிகளைச் சேர்த்து, 45 டிகிரி செல்சியஸில் அடைகாத்து, கெட்டியான பிறகு, 4-5 நாட்களுக்குள் ரைசோபியம் கிடைக்கும். ரைசோபியத்தை கரியுடன் (நிரப்பு பொருள்) கலந்து சந்தைப்படுத்தலாம் அல்லது பண்ணை வயல்களில் பயன்படுத்தலாம்.
    அசோலா இது நெல் / சேற்று வயல் பயிர்களுக்கு ஏற்றது, அசோலா 40-50 டன்கள் வரை உயிர்த்திணிவுக் வழங்கும் மற்றும் ஏக்கருக்கு 30-40 கிலோ நைட்ரஜனை நிலை நிறுத்தும்.
    1. செங்கற்களால் 2மீ X 1மீ X 15 செமீ அளவுள்ள தொட்டியை தயார் செய்து, தொட்டியின் மேல் பாலித்தீன் தாளைப் பரப்பவும். 2. தொட்டியில் 25 கிலோ சுத்தமான மண்ணை சேர்த்து தொட்டி முழுவதும் ஒரே சீராக பரப்பி ஏக்கருக்கு 10 கிலோ ராக் பாஸ்பேட் சேர்க்கவும். 3. 5 கிலோ மாட்டு சாணத்தை தொட்டியில் கலக்கவும். 4. தொட்டியில் 15 செ.மீ உயரத்திற்கு நீரை தேக்கவும். 5. ஒரு சதுர மீட்டருக்கு 500 கிராம் அசோலாவை தொட்டியில் இடவும். 6. கம்பளிப்பூச்சி போன்ற பூச்சித் தாக்குதலைக் குறைக்க ஒரு சதுர மீட்டருக்கு 2-4 கிராம் என்ற அளவில் கார்போஃப்யூரான் 3ஜி துகள்களைப் இடவும். 7. 1-2 வாரங்களுக்கு பிறகு அசோலா தொட்டியின் மேல் முழுமையாக வளர்ந்து அறுவடைக்கு தயாராகிவிடும். 8. தினமும் 1-2 கிலோ அசோலா அறுவடை செய்யலாம்.
    1.ஒவ்வொரு 2 வார இடைவெளியில் 2 கிலோ பசு சாணத்தை இடவும் 2.தொட்டியில் இருந்து ¼ தண்ணீரை அகற்றி, 2 வாரங்களுக்கு ஒருமுறை புதிய தண்ணீரை நிரப்பவும். 3.பழைய அடித்தள மண்ணை அகற்றி புதிய மண்ணை தொட்டியில் சேர்க்கவும். 4.6 மாதங்களுக்கு ஒருமுறை தொட்டியை முழுவதுமாக சுத்தம் செய்து, புதிதாக சாகுபடியை மீண்டும் தொடங்க வேண்டும். 5.வெப்பநிலையை 25-35 டிகிரி செல்சியஸ்யும் மற்றும் கார அமில நிலையை 5.5 முதல் 7 வரை பராமரிக்கவும்.
    - நெல் நடவு செய்வதற்கு முன், அசோலாவை 0.6-1.0 கிலோ/சதுர மீட்டர் (6.25-10.0 டன்/எக்டர்) என்ற அளவில் இடவும். நெல் நடவு செய்த ஒரு நாள் முதல் மூன்று நாட்களுக்குப் பிறகு, அசோலாவை 100 கிராம்/சதுர மீட்டர் (500 கிலோ/ஏக்கர்) என்ற விகிதத்தில் இட வேண்டும் மற்றும் 25 முதல் 30 நாட்களுக்கு வளர விட வேண்டும். முதலில் களையெடுத்த பிறகு, அசோலாவை மண்ணுடன் சேர்த்து உழவு செய்ய வேண்டும். - அசோலாவை ஒரு விலங்குக்கு 2-2.5 கிலோ அசோலா என்ற அளவில் விலங்குகளின் வழக்கமான உணவில் சேர்க்கலாம் அல்லது மற்ற தீவனங்களுடன் 1:1 விகிதத்தில் கொடுக்கலாம்.
    Attachment 1
    Attachment 2
    அனைத்து வகையான உயிர் உரங்களும் அருகிலுள்ள வேளாண்மை அறிவியல் நிலையங்களில் (கேவிகே) கிடைக்கும். தற்போது அனைத்து உயிர் உரங்களும் இணையத்தில் கிடைக்கின்றன.
    இந்தக் கட்டுரையைப் படித்ததற்கு நன்றி, கட்டுரையை விரும்புவதற்கு ♡ ஐகானைக் கிளிக் செய்திருப்பீர்கள் என்று நம்புகிறோம், மேலும் அதை இப்போது உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
    இதை விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் விவசாயிகளுக்கு உதவுங்கள்.
    Whatsapp Iconவாட்ஸ்அப்Facebook Iconஃபேஸ்புக்
    Need Help?
    Contact our Hello Bayer support for all your queries
    Bayer Logo
    Toll Free Help Desk
    1800-120-4049
    வீடுமண்டி விலைகள்